×

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி!!

டெல்லி : சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம். வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் செப்டம்பர் 15ம் தேதி மாலை ஆறு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான கூட்ட அரங்கில் சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைப்பார்கள். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.

சன்சத் தொலைக்காட்சி பற்றி:

2021 பிப்ரவரி மாதத்தில், லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டு, சன்சத் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்/ கொள்கைகளின் அமலாக்கம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள்/ நலன்கள்/ பிரச்சினைகள் ஆகிய முக்கியமான நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.


Tags : Modi ,Sansad TV ,International Democracy Day , எம். வெங்கையா நாயுடு, பிரதமர், நரேந்திர மோடி ,மக்களவை, சபாநாயகர் ,ஓம் பிர்லா
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...