×

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

புவனேஸ்வர்: ஒடிசாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இருப்புப்பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் சரக்கு ரயில் தடம் புரண்டு நதியில் மூழ்கியது. இது குறித்து ஒடிசா ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மாநிலத்தில் கடும் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் கோதுமை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று பிரோஸ்பூரில் இருந்து குர்தா சாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அங்குல்- தல்சர் சாலை வழியாக பயணித்த போது அதிகாலை 2.30 மணிக்கு நந்திரா நதியின் மீது தடம்புரண்டது. அப்போது கோதுமை இருந்த பெட்டிகள் நதியில் மூழ்கியது. இதையடுத்து கிழக்குகரை ரயில்வே நிர்வாகம் 12 ரயில்களை ரத்து செய்தது. 8 ரயில்களில் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து விபத்து நிவாரண வாகனம் சம்பவயிடத்துக்கு வந்து நதியில் மூழ்கிய ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்ஜினுக்கோ, லோகோ பைலட்டுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மழை வெள்ளத்தில் இருப்புபாதை முழுமையாக மூழ்கியிருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

Tags : Odisha , Freight train derails in Odisha
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை