×

அமித்ஷா பேச்சு மாநில மொழிகளுக்கு இந்தி விரோதி கிடையாது

புதுடெல்லி: இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக, கடந்த 1949ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14ம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி பல்வேறு தலைவர்களும் நேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தி தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வியில் படித்தாலும், வீட்டிலும் பெற்றோர்கள் அவர்களுடன் தாய்மொழியில் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் அடிப்படை ஆணி வேர் சிதைவடையாமல் இருக்கும். இந்தி மொழியானது, பிற மாநில மொழிகளுக்கு விரோதி கிடையாது. அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் இந்தி நண்பன். நமது பிரதமர் சர்வதேச அளவில் கூட இந்தியில் பேச முடிகிறது. பிறகு எது நம்மை சங்கடப்படுத்துகிறது. இந்தியில் பேசுவதால் கவலையாக இருந்த நாட்கள் போய் விட்டன. இனி அந்த சூழல் இல்லை. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Tags : Amitsha , Amitsha's spoken state languages are not hostile to Hindi
× RELATED தேர்தல் பத்திரம்.....