முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் லோக்ஜனசக்தி எம்பி மீது பாலியல் வழக்கு பதிவு

புதுடெல்லி: பாலியல் வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் லோக்ஜனசக்தி எம்பி டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதி லோக் ஜனசக்தி கட்சி் மக்களவை உறுப்பினர் பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது பெண் தொண்டர் பாலியல் புகார் டெல்லி போலீசில் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வக்கீல் சுதேஷ் குமாரி ஜெத்வா கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் படி எம்பி பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர் என்றார்.

இந்நிலையில், பாலியல் வழக்கில் போலீஸ்  நடவடிக்கையை தவிர்க்க பிரின்ஸ் ராஜ் பஸ்வான் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து லோக்ஜனசக்தி கட்சியின் செய்திதொடர்பாளர் ஷரவண் குமார் கூறுகையில், எங்கள் கட்சி எம்பி மீது பெண் தொண்டர் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகாருக்கு காரணம் அரசியல் சூழ்ச்சி. அவர்கள் எம்பியை மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து புகாரும் பதியப்பட்டுள்ளது. நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஹனி டிராப் மூலம் பல அரசியல் தலைவர்களை சிக்க வைக்கும் கும்பலின் கைவரிசையாக கூட இது இருக்கலாம். என்றார்.

Related Stories:

>