உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக பலத்தை நிரூபிப்போம்: விஜயகாந்த் கருத்து

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிரூபிப்போம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான திமுக தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுகவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் அதிமுகவும் தேர்தலை சந்திக்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இந்நிலையில் வர உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜயகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலில், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: