மலிங்கா ஓய்வு

கொழும்பு: இலங்கை வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் (டார்வின், ஜூலை 1-3) அறிமுகமான மலிங்கா (38 வயது), 30 டெஸ்ட் போட்டியில் 101 விக்கெட் (சிறப்பு: 5/50) மற்றும் 275 ரன்; 226 ஒருநாள் போட்டியில் 338 விக்கெட் (சிறப்பு: 6/38) மற்றும் 567 ரன்; 84 டி20 போட்டியில் 107 விக்கெட் (சிறப்பு: 5/6) மற்றும் 136 ரன் எடுத்துள்ளார். இது தவிர, ஐபிஎல் (மும்பை இந்தியன்ஸ்), பிக் பாஷ் (மெல்போர்ன் ஸ்டார்ஸ்) உள்பட பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் தனது அதிவேக யார்க்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை மிரட்டி விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். டெஸ்டில் இருந்து 2010லும், ஒருநாள் போட்டிகளில் இருந்து 2019லும்  விடைபெற்றிருந்த அவர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா நேற்று அறிவித்தார்.

Related Stories:

More
>