உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வடக்கு, தெற்கு ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. வாலாஜாபாத் வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் சேகர், பூபாலன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து விளக்கி கூறினர். உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடும் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை  மாவட்ட செயலாளர் சுந்தரிடம் கூறினர்.

Related Stories:

>