கடம்பத்தூர் ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: கடம்பத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டி.யாமினி, மூ.நரேஷ்குமார், பா.யோகநாதன், நா.வெங்கடேசன், வி.கோவிந்தம்மாள் விஜயராகவன், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், சுபப்பிரியா சக்திதாஸன், பா.சுமதி பாபு, கேபிஎஸ்ஆர்.கார்த்திகேயன், மு.நீலாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வழக்கம்போல் வரவு, செலவு கணக்குகள் முதலில் வாசிக்கப்பட்டது. பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கவும், ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், தனியார் தொழிற்சாலைகளுக்கு கட்டிட வரைபட அனுமதி என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் ஒதுக்கப்படும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது தங்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

Related Stories:

More
>