2022ம் ஆண்டு இறுதிக்குள் ரூ.1000 கோடி மனைகள் விற்பனை: ஜி ஸ்கொயர் நிறுவனம் இலக்கு

சென்னை: ஜி ஸ்கொயர் நிறுவனம் பல்வேறு வீட்டு மனை திட்டங்களை சென்னை மற்றும் கோவையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனத்தின் ‘ஜி ஸ்கொயர் பீச்வாக்’ வீட்டு மனைகள் திட்டம் நீலாங்கரையில் இசிஆர் சாலைக்கு மிக அருகில் துவக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு வீட்டு மனை திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருவதன் மூலம் 2022ம் நிதி ஆண்டின் இறுதிக்குள் சென்னை மற்றும் கோவையில் 15க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிமுகம் செய்து ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி என்.ஈஸ்வர் கூறுகையில், `சிறந்த விலையில் உயர்தரமிக்க மனைகளை மட்டுமே விற்பனை செய்வதில் எங்கள் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. தமிழ்நாட்டில் பர்பெக்ட் பிளாட் கலாச்சாரத்தை கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறோம்,’ என்றார்.  

Related Stories:

>