திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்நிலை திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் இ.ஏ.பி.சிவாஜி, சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஷ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.முர்த்தி, இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.குணசேகரன், அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திமுக முப்பெரும் விழாவில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கு கலைஞர் விருது அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. வரும் 20ம் தேதி ஒன்றிய அரசு காஸ் சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் உயர்த்தியது கண்டித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேலும், ஊத்துக்கோட்டையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கியதற்கும், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட தீர்மானக்குழு அன்புவாணன்உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>