நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி(எதிர்க்கட்சி தலைவர்): மருத்துவ படிப்பு என்பது பெரும்பான்மையான மாணவர்களின் கனவு ஆகும். ஆனால், மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை.  தற்கொலை முடிவு என்பது ஆபத்தானது. அரியலூர் மாணவி கனிமொழியின் இழப்பே நீட்டுக்கான நமது கடைசி இழப்பாக இருக்கட்டும் என்று அனைத்து மாணவச் செல்வங்களையும் கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.  

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மத்திய பாஜ அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி உரிய அழுத்தத்தை கொடுப்பார்கள். இதன்மூலம், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். வைகோ (மதிமுக பொது செயலாளர்): நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்.  நீட் எழுதிய மாணவ செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது. உங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டால், பெற்றோரும், உற்றாரும் எத்தகைய இழப்புக்கு உள்ளாவர்கள்/ முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):  மாநில உரிமை காக்கும் போராட்டத்தில் முதல்வர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒன்று திரண்டு ஆதரிக்க வேண்டும்.

தமாகி தலைவர் ஜி.கே.வாசன்:நீட் தேர்வு எழுதிய  மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன்: நீட்தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்’ என்று, ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போராடுவதற்கு மாணவர் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும் அதேபோல, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>