வரும் 17ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் தகவல்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்  நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகம்  முழுவதும் 40 ஆயிரம் முகாமில், தடுப்பூசி போடப்படுவது ஒரு திருவிழாவாகவே  நடந்தது.

இதுபோன்று வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை முகாம்  நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்  எழுதியுள்ளோம். வாரம் 50 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு கேட்டுள்ளோம்.  இன்று வரை 17 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. வருகிற 17ம் தேதி  (நாளை மறுதினம்) மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>