×

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஊரடங்கில் தளர்வு: கேரளாவில் அருங்காட்சியகங்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் நிபந்தனைகளில் கூடுதல் தளர்வுகள் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. நேற்று 15058 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. நேற்றைய தொற்று சதவீதம் 16.39 ஆகும். சிகிச்சை பலனின்றி 99 பேர் மரணமடைந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பெரும்பாலான மாநிலங்களில் தொற்று சதவீதம் 2க்கும் குறைவாக உள்ள நிலையில் கேரளாவில் மட்டும் தற்போதும் தொற்று சதவீதம் 16க்கு மேல் உள்ளது.

கேரளாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மும்மடங்கு ஊரடங்கு, இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு, பிற பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. என்றாலும் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டது. அதன்பிறகு இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகளை கேரள அரசு அறிவித்து வருகிறது. இதன்படி கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் கேரளாவில் அருங்காட்சியகங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் மிருக காட்சி சாலைகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala , Relaxation in curfew amid corona spread: Museums open in Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...