வால்பாறை ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சில இடங்களில், பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரக்கிளைகள் முறிந்து சாலையோரம் விழுந்தது. வால்பாறை ரோடு, பில் சின்னாம்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நின்ற கொற்றை மரம் ஒன்று, இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கோட்டூர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். 2 மணி நேரத்திற்கு பிறகே மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டது.

Related Stories:

>