மேற்குவங்கத்தில் காய்ச்சல்,வயிற்றுப் போக்குடன் 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!!

ஜல்பைகுரி:காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்குடன் 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் மேற்குவங்க மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் 130 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்குடன் ஜல்பைகுரி சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை மேலும் மோசமானதால் நார்த் பெங்கால் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். யாருக்கும் அனுமதி மறுக்கப்படாத அளவு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலையானது, குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மருத்துவமனை உள்கட்டமைப்பில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். சில குழந்தைகளின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தேவைப்பட்டால், குழந்தைகளுக்கு கோவிட் -19 பரிசோதிக்கப்படும்’ என்றனர். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் மவுதீத கோதார பாசு, ஜல்பைகுரி மருத்துவமனைக்கு வந்து நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.

Related Stories:

>