×

நீட்டை எதிர்த்தாலும் அதிமுக பாஜ கூட்டணியில்தான் உள்ளது : சி.டி.ரவி பேட்டி

திருச்சி:திருச்சியில் நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தமிழக பொறுப்பாளரும், தேசிய பொது செயலாளருமான சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர்  சி.டி.ரவி அளித்த பேட்டி:  பாஜக சார்பில் வரும் 17ம் தேதி முதல் அக்டோபர்  7ம் தேதி வரை 20 நாட்கள் சேவா சமர்ப்பன் அபியான் பிரசாரம் நடைபெறுகிறது.   

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. சட்டப்பேரவையில்  நீட் எதிர்ப்பு மசோதாவை அதிமுக, பாமக ஆதரித்துள்ளது. அது, அவர்கள் கட்சியின் நிலை. ஆனால் பாஜக கூட்டணியில் தான் அவர்கள் உள்ளனர். தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் போட்டியிடும். தனித்தா, கூட்டணியா என்பதை மாநில நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : AIADMK ,BJP ,CD Ravi , சி.டி.ரவி
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...