×

மறைமுகமாக இந்தியை திணிக்கும் அமித்ஷாவின் பேச்சு : ராமதாஸ் கண்டனம்!!

சென்னை : தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மருத்துவர் இராமதாசு  வலியுறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான்  நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்!

இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும்  என்று கூறுவதில் ஏராளமான  பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது!.தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது.  அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை  மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்!,என்றார்.



Tags : Amitsha ,Ramadas , ராமதாஸ்
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...