நீட் எழுதிய மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்; எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டுங்கள்: வைகோ அறிக்கை

சென்னை: நீட் எழுதிய மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்; எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நீட் எழுதிய மாணவ செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு, வாழத் துணிய வேண்டும். நம்பிக்கை இழக்கக் கூடாது. உங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டால், பெற்றோரும், உற்றாரும் எத்தகைய இழப்புக்கு உள்ளாவர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விடுவார்கள். சமூகத்திற்கும், நாட்டிற்கும், வீட்டிற்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய பெரும் பணிகள் நிரம்ப இருக்கின்றன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories:

>