×

மதுரை மேம்பால விபத்து : 3 பேர் மீது வழக்குப்பதிவு, செப்.17ல் ஆய்வறிக்கை தாக்கல்

மதுரை: மதுரையில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்திற்கான உண்மை காரணங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை நிபுணர் குழு வெள்ளியன்று தாக்கல் செய்ய உள்ளது. மதுரையில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட உண்மையான காரணங்கள் குறித்து வருகின்ற வெள்ளிக்கிழமை நிபுணர் குழு ஆய்வறிக்கையை தாக்கல் செய்கின்றனர். மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மாலை இடிந்து விபத்திற்குள்ளானது. இதில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக இதுவரை 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் கட்டுமான நிறுவன திட்ட பொருளாளர், கட்டுமான பணியின் பொருளாளர், ஹைட்ராலிக் மிஷினின் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழிற்நுட்ப கழகத்தின் பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் நேரடியாக ஆய்வுகளை செய்து அறிக்கையை தாக்கல் செய்வார் என்று பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

அதன்படி நிபுணர் குழுவின் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதுதொடர்பான கட்டுமான பொறியாளர், ஹைட்ராலிக் மிஷின் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தான் இந்த பாலம் இடிந்து கீழே விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Madurai Accident , Madurai, flyover, accident
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு