திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சுவாமி தரிசனம்: கோயிலுக்கு வெளியே கணவர் முத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா, தனது கணவர் ஆன்ட்ரி கொஸ்சீவுடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ஸ்ரேயாவுக்கு அவரது கணவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் முத்தம் கொடுக்கும் விதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது ஸ்ரேயா நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு இந்தி மற்றும் தமிழில் நடித்து வரும் படம் திரையில் விரைவில் வெளியாகும் என்றார்.

Related Stories: