நள்ளிரவில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார்!: பா.ஜ.க நடிகை ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகார்..!!

சென்னை: பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடி தெற்கு மாட வீதியில் மகளிர் சுய உதவி குழு நடத்தி வரும் கீதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி தங்களுக்கு அறிமுகமானதாகவும், வங்கி மூலம் லோன் பெற்று தந்ததோடு, வெற்று காசோலை, வெற்று காகிதம் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாங்கள் பெற்ற கடனுக்கு ஈடான தொகையை செலுத்தி முடித்துவிட்டதாகவும் ஆனால் தங்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு நடிகை ஜெயலட்சுமி மிரட்டுவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் வழக்கறிஞர்கள் என அறிமுகமான சார்லஸ், அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் வீடுகளுக்குள் வந்து கந்துவட்டி கொடுமை அளிப்பதாகவும் கீதா குற்றம்சாட்டினார். தொடர்ந்து, கந்துவட்டி கொடுமை அளிக்கும் நடிகை ஜெயலட்சுமி மற்றும் அவரது நண்பர்களான சார்லஸ், அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரிடம் கீதா புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>