மேலூர் அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

மேலூர்: மேலூர் அருகே நேற்று நடைபெற்ற அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மதுரை மேலூர் அருகே எழுவக்கரையான்பட்டியில் அமைந்துள்ள பொய்கை முனியாண்டி வெங்கல மடை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மூன்று நாட்களாக யாக பூஜைகள், வேத பாராயணங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் செய்யப்பட்டது.

இந்த பழமை வாய்ந்த கோயில் சிதலமடைந்து காணப்பட்டதால், சிவகங்கை மாவட்டம் நாலூர் நாடு கிளாதிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை மலம்பட்டி கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் வந்த சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதில் கிளாதிரி, தமராக்கி, திருவாதவூர், மேலூர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, இறை அருளை பெற்று சென்றனர்.

Related Stories: