×

ஓசூர் ஓலா ஈ- ஸ்கூட்டர் ஆலையில் 10,000 பெண்களுக்கு பணி : உலகில் பெண்களால் இயக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்ற சிஇஓ திட்டம்!!

ஓசூர் : ஓசூர் அருகே உள்ள ஓலா ஈ- ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் 10,000 பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த மாதம் எஸ் 1  ஈ- ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.இந்த நிலையில் தற்போது முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு தொழிற்சாலையாக ஓலா எதிர்கால தொழிற்சாலை அமையும் என்று அதன் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையில் பணியாற்ற உள்ள முதல் பெண்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஓலா எதிர்கால தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு வாகனத்தின் முழு உருவாக்கத்திற்கும் பெண்களே பொறுப்பாவார்கள் என்றும் பாவீஷ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குவது அவர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தை மட்டுமல்ல முழு சமூகத்தையும் மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

Tags : Hosur Ola , ஓசூர்
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...