கொடைக்கானலில் புதிய வகை போதை மருந்தின் புழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் பாதிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் புதிய வகை போதை மருந்தின் புழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுற்றுலா மையங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதனை பயன்படுத்தி கொடைக்கானலில் போதை விற்பனை கும்பல் புதிய வகை போதை மருந்தை புழக்கத்தில் விட்டுள்ளது. எல்எஸ்டி என்ற இந்த புதிய வகை போதை மருந்து இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து அதிக அளவு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

நீண்ட நேரத்திற்கு போதை தரும் இந்த மருந்தால் இளைஞர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு மட்டுமின்றி அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு போதை மருந்தை விற்கும் கும்பலை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>