இந்தியாவில் குழந்தைகளை கொரோனா தொற்று தாக்குவது அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை தாக்குவது திடீரென அதிகரித்துள்ளதால் மிகுந்த கவனம் தேவை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 1 முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்படுவது 2.72 முதல் 3.59% ஆக இருந்தது. ஆனால் 2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தொற்று பாதிப்பு 2.80 சதவீதத்தில் இருந்து 7.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது நூறு பேரில் 7 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக உள்ளனர்.

கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்த குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கூடுதல் பரிசோதனை இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. மூன்றாம் அலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ள நிபுணர்கள் 3வது அலையில் இருந்து குழந்தைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிசோரம் மாநிலத்தில் குழந்தைகள் பாதிப்பு 16.48 சதவீதமாக பதிவாகி உள்ளது. டெல்லியில் மிகவும் குறைவாக உள்ளது.

Related Stories:

>