×

குஜராத், ஒடிசாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கனமழை: தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரம்

சௌராஷ்டிரா: குஜராத், ஒடிசாவில் கொட்டி தீர்த்த கனமழையால் அம்மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றது. குஜராத்தில் சௌராஷ்டிரா பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ராஜ்கோட் ஜாம் நகர் பகுதிகள் வெள்ளகாட காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர்  சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குடியிருப்புபகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் வீடுகளின் மாடிகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளார். வெள்ளம் பதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் குரியில் 87 ஆண்டுகளில் இல்லாத அளவிற்க்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பிரசித்திபெற்ற ஜெகன்நாதர்க்கோவில் அமைந்துள்ள குரி  மாவட்டத்தில் 34 செ.மீ. மழை பதிவாகி இருப்பதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே வங்ககடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.


Tags : Gujarat ,Odisha ,National Disaster Rescue Force , Gujarat, Odisha, Heavy rains, National Disaster Rescue Force
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...