அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகர் மு.அப்பாவு கடைசி நாளான நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:  பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக- ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆர்.கணேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை-  ஆர்.இளங்கோ, அப்துல் சமது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக  அ.வெங்கடேசன், பூமிநாதன், ஊர்வசி அமிர்தராஜ், வி.வி.ராஜன் செல்லப்பா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக  எம்.சி.சண்முகையா, சதன் திருமலைக்குமார், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை- டி.ராமச்சந்திரன், ரா.அருள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக நா.எழிலன், கணபதி, தமிழ் பல்கலைக்கழகம் ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக டி.கே.ஜி.நீலமேகம், நா.பிரபாகரன், சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்றப்பேரவை- அ.வெற்றியழகன், வி.ஜே.ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் ரா.மூர்த்தி, கோ.செந்தில்குமார், கு.மரகத குமரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, அண்ணா பல்கலைக்கழகம் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆட்சிக்குழு உறுப்பினராக சிந்தனை செல்வன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் ஆட்சிக்குழு உறுப்பினராக ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மேலாண்மைக் குழும உறுப்பினராக வேல்முருகன், தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மேலாண்மைக் குழும உறுப்பினராக வி.பி.நாகை மாலி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மேலாண்மைக் குழும உறுப்பினராக ஏ.ஜே.மணிக்கண்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினராக ஏ.பி.நந்தகுமார், க.சோ.க.கண்ணன் ஆகியோர் பதவிகளுக்கு முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறேன்.  பல்கலைக்கழகங்களின் அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பேரவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டால் அந்த நாளோடு பல்கலைக்கழகத்தின் அவர் வகித்து வரும் உறுப்பினர் பதவியும் முடிவடையும்.

Related Stories:

More
>