×

காஞ்சி காமாட்சியம்மன் கோயில்: தெற்கு ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெற்கு ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த ஜூலை 2ம் தேதி இடி விழுந்து, அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 20ம் தேதி பாலாலயம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கோயில் தெற்கு ராஜகோபுரம் சிதிலமடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதைமுன்னிட்டு, கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜைகள் கும்பகோணம் தினகர் சர்மா தலைமையில் தொடங்கப்பட்டன.

அன்றைய தினம் கோ பூஜை, யாகசாலை மண்டப பூஜை , மூலமந்திர ஜப ஹோமம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து நேற்று காலை மகா பூர்ணாஹூதி நடத்தி புனிதநீர் குடங்களில் கொண்டு வந்து கோயிலின் தெற்கு ராஜகோபுரத்தி ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளதால் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காரியம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், மேலாளர் சுந்தரேசன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஜெயராமன், கோயில் நிர்வாக அலுவலர் தியாகராஜன், கோயில் செயல் அலுவலர்கள் குமரன், வெள்ளைச்சாமி ஆய்வாளர் பிரித்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchi Kamatsiyamman Temple ,South Rajagopuram , Kanchi, Kamatsiyamman Temple
× RELATED மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சியம்மன் கோயில் தேரோட்டம்