பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிக்காக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கை வருமாறு. எழும்பூர்  - விழுப்புரம் வழித்தடத்தில் காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி ரயில்  நிலையங்களில் நாளை (15ம் தேதி), 17, 18, 20, 22, 24, 25 மற்றும் 27 ஆகிய  தேதிகளில் காலை 11.25 மணிமுதல் மதியம் 1.25 மணிவரை பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து  15, 17, 20, 22, 24, 27 ஆகிய  தேதிகளில் காலை 10.10  மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை  கடற்கரையில் இருந்து  15, 17, 18, 20, 22, 24, 25, 27 ஆகிய தேதிகளில் காலை 10.56 மணிக்கு செங்கல்பட்டுக்கு செல்லும்  ரயில்  கூடுவாஞ்சேரி  - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. காலை 11.50 மணிக்கு செல்லும் ரயில் 25ம் தேதியும், காலை 11.30 மணிக்கு 15, 17, 20, 22, 24, 27 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே  ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மதியம் 12.20 மணிக்கு 15, 17, 20, 22, 24, 27 ஆகிய  தேதிகளில்  சென்னை கடற்கரைக்கு செல்லும்  ரயில், செங்கல்பட்டு -  கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.  செங்கல்பட்டில் இருந்து மதியம் 1 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும்   ரயில் வரும் 18ம் தேதி செங்கல்பட்டு -  கூடுவாஞ்சேரி இடையே ரத்து  செய்யப்படுகிறது.

Related Stories:

More
>