உள்ளாட்சி தேர்தலில் திமுக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் உழைத்து அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்யவேண்டும்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மதுராந்தகம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் சி.பி.எம்.அ.சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா, மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்றார். திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.விடுதலை, காஞ்சி தெற்கு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும் தொழில்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு  ஆகியோர் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பேசினர்.

கூட்டத்தில், அண்ணாவின் 113வது பிறந்தநள் விழா காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் கொண்டாட வேண்டும். திமுக முப்பெரும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 15ம் தேதி (நாளை) மாலை 5 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் பங்குபெற காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில், காஞ்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

வரும் 17ம் தேதி பெரியார் பிறந்தநாளில், முதல்வர் மு.க.ஸ்டாலினால் பெருமை சேர்க்கும் விதமாக சமூகநீதி நாள் என அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. பெரியார் பிறந்தநாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட திமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் திமுக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, செயற்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், நாகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜனனி, மோகன்தாஸ், ராமலிங்கம், சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சத்தியசாயி, ஸ்ரீதர், குமார், கண்ணன், ராமச்சந்திரன், தம்பு, பாபு, நகர செயலாளர் குமார், பேரூர் செயலாளர் விஜயகணபதி, உசேன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், துணை அமைப்பாளர் எழிலரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், துணை அமைப்பாளர் யோகானந்த், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பழையனூர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி அரசு, பொன்.சிவகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>