ஆவடி மாநகர திமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா: அமைச்சர் நாசர் நேரில் வாழ்த்து

ஆவடி:ஆவடி மாநகர திமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆவடி வடக்கு மாநகர திமுக 36வது வார்டு நகர பிரதிநிதி அ.வீரபாண்டியன், வீ.நீலாவதி - ம.பாண்டியன், பா.பானுமதி ஆகியோர்  இல்ல திருமண வரவேற்பு விழா ஆவடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநகர பொறுப்புக்குழு உறுப்பினரும், வட்டச் செயலாளருமான ச.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வடக்கு மாநகரச் செயலாளர் ஜி.நாராயணபிரசாத் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர பிரதிநிதி வீரபாண்டியன் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு மணமக்கள் பா.குகன் - வீ.பாண்டியச்செல்வி ஆகியோரை வாழ்த்தினார்.

மேலும், நிகழ்ச்சியில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஆவடி பகுதி மாநகர செயலாளர்கள் பேபி சேகர், ஜி.ராஜேந்திரன், பொன்.விஜயன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜெ.ரமேஷ், கு.சேகர், வீ.சிங்காரம், மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் க.மு.ஜான், ஜே.ஜான்சான், டி.துரைராஜ் வி.சித்ரா, நிர்வாகிகள் ரமேஷ், பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், மதிசெல்வம், தமிழ்வாணன், நரேஷ், ஜெயந்தன், வின்சென்ட், நாககுமரன், பன்னீர்செல்வம், தினேஷ், ஹரிகிருஷ்ணன், சேகர், குழந்தைவேலு, மாரியப்பன், ராம்குமார், ஆனந்தன், இளங்கோ, அரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், பொறியாளர் வீ.அருண்பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories:

>