×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆதாம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி, ப.சிட்டிபாபு, எம்.பன்னீர்செல்வம், மு.நாகன், பொதுக்குழு உறுப்பினர் வி.சி.ஆர்.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருத்தணி நகரச் செயலாளர் வி.வினோத்குமார்  வரவேற்றார். இந்த கூட்டத்தில் திமுக முப்பெரும் விழாவில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணுவிற்கு கலைஞர் விருது வழங்க தேர்வு செய்த திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நாளை (செப்டம்பர் 15ம் தேதி) திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை திருத்தணியில் காணொலி காட்சி மூலம் கண்டுகளித்திட அனைவரும் கலந்து கொள்வது, வருகின்ற 20ம் தேதி வேளாண் தடைச் சட்டம் மற்றும் பெட்ரோல், காஸ் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்தணி நகராட்சி புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கவேண்டும்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் ரத்த சேமிப்பு வங்கி தொடங்கவும், தமிழக அறநிலையத்துறை சார்பில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு 5 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் அமைக்கவும், திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சென்றுவர ரோப் கார் அமைத்திட ஆரம்ப கட்டப் பணிகளுக்காக 1 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், 5 திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளுக்காக 250 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், திருக்கோயில் பணியாளர்களுக்கு 5 கோடி செலவில் திருத்தணியில் பயிற்சி மையம், திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் 50 லட்சம் செலவில் பயிற்சி மையம், காவேரிராஜபுரம் கிராமத்தில் 65 கோடி திட்ட மதிப்பில் 144 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் ஊதியம் உயர்த்தியும் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூளுர் எம்.ராஜேந்திரன், பா.ஆர்த்தி ரவி, ஜி.ரவீந்திரா, சி.ஜெ.சீனிவாசன், என்.கிருஷ்ணன், பெ.பழனி, சி.என்.சண்முகம், எம்.ஜோதி குமார், டி.ஆர்.கே.பாபு, சி.சு.ரவிச்சந்திரன், எஸ்.மகாலிங்கம், மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், டி.கிறிஸ்டி, மாவட்ட அமைப்பாளர்கள் வி.கிஷோர் ரெட்டி, டாக்டர் ராஜேந்திரன், டி.கே.பாபு, தா.மோதிலால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tiruvallur West District ,Consultative , DMK, Consulting
× RELATED சசிகலா அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்