தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட மனநல பிரிவு சார்பில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் அரசு மருத்துவமனை வரை பேரணியாகச் சென்று தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>