×

அதிமுக பெண் சேர்மேன்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: கோட்டாட்சியரிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் மனு

திருத்தணி:  பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்களில் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் அதிமுகவைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பெண் கவுன்சிலர் ஜான்சிராணி ஒன்றிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 6ம் தேதி நடந்த ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் மற்றும் இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். கோரம் இல்லாததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ேநற்று பள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் திமுக 4, அதிமுக 3, காங்கிரஸ் 1, தேமுதிக 1 என மொத்தம் 9 பேர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், `ஒன்றிய சேர்மன் எங்களை மதிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார்,’ என கூறி 9 கவுன்சிலர்களும் பெண் சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அத்துடன் சேர்மனை மாற்ற வேண்டும் என கோட்டாட்சியர் சத்யாவிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் சத்யா இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

இதேபோல், திருத்தணி ஒன்றிய சேர்மனாக ஆதிதிராவிடர் பெண் அதிமுக சேர்மன் தங்கதனம் உள்ளார். இங்குள்ள, 12 கவுன்சிலர்களில் மூவர் தவிர மீதமுள்ள 9 கவுன்சிலர்கள் சேர்மன் தங்கதனம் செயல்பாடுகள் சரியில்லை. கவுன்சிலர்களை மதிப்பதில்லை என புகார் தெரிவித்தும், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வருவாய் கோட்டாட்சியர் சத்யாவிடம் மனு கொடுத்தனர்.

Tags : Union ,Gottscher , AIADMK
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...