×

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: 1500 கிமீ பாய்ந்து தாக்கும்

வாஷிங்டன்: உலக நாடுகளின் எதிர்ப்பு, ஐநா.வின் தடை ஆகியவற்றையும் மீறி, வடகொரிய  அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்.   இந்நிலையில், 1,500 கிமீ தூரம் பறந்து இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நேற்று நடத்தியது. அமெரிக்காவின் ‘டொமாஹக்’ ரக ஏவுகணையை போல் உள்ள இது, அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்ததா? என்பது தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாமல் இருந்த வடகொரியா, தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு இருப்பது  அதன் அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags : North Korea , North Korea, missile, test
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...