×

‘அப்பா ஜான்’ பேச்சு: யோகிக்கு கண்டனம்: பீகார் நீதிமன்றத்தில் வழக்கு

முசாபர்நகர்:  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குஷிநகரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘உத்தரப் பிரசேத்தில் 2017ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் தான் பொது விநியோகத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக மாறியது. அதற்கு முன் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை ‘அப்பா ஜான்’ என்று கூறுபவர்கள் தான் சாப்பிட்டார்கள்,’’ என்றார்.

இஸ்லாமிய சமூகத்தினர் தங்களின் தந்தையை அழைக்க பயன்படுத்தும் இந்த வார்த்தையை யோகி பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரம், பீகார் நீதிமன்றத்தில் யோகி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமன்னா ஹாஷ்மி எனும் சமூக ஆர்வலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தினரை இழிவுபடுத்தி உள்ள யோகி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.

Tags : Father John ,Yogi ,Bihar , Chief Minister Yogi Adityanath
× RELATED ஒரு ஓட்டு நாட்டின் தலைவிதியை மாற்றும்: உ.பி முதல்வர் யோகி சொல்கிறார்