மம்தாவுக்கு எதிராக பாஜ வேட்பாளர் வேட்புமனு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.  இந்நிலையில், இம்மாநிலத்தில் பாபனிபூர் சட்டப்பேரவை தொகுதி உட்பட 3 தொகுதிகளுக்கு வருகிற 30ம் தேதி  நடைபெறுகிறது. இதில், பாபனிப்பூர் தொகுதியில் போட்டியிடம் மம்தா பானர்ஜி ஏற்கனவே வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார். இவரை எதிர்த்து பாஜ.வின் சார்பில் பெண் வழக்கறிஞரான  பிரியங்கா திப்ரூவல் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Related Stories:

More
>