காங். மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னான்டஸ் மங்களூருவில் மரணம்: பிரதமர், சோனியா இரங்கல்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஆஸ்கர் பெர்னான்டஸ், கடந்த மாதம் வீட்டில் கால் தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது மூளையில் ரத்தம் உறைந்ததால், டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பகல் காலமானார். அவருக்கு புளுசம் மாத்தியாஸ் என்ற மனைவியும், ஓசனி என்ற மகளும், ஓஷன் என்ற மகனும் உள்ளனர்.

ஆஸ்கர் பெர்னான்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவகவுடா முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் நினைவேந்தல் நடந்தது. அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்தினர். பெர்னான்டஸின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories: