மதுரவாயல்-வாலாஜா இடையிலான சுங்க சாவடிகளில் 50 சதவீத கட்டணமே வசூலிக்கப்படுகிறது: ஐகோர்ட்டில் நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

சென்னை: சென்னை மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. சென்னை மதுரவாயல்-வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இந்த உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலை துறை வழக்கறிஞர் கார்த்திகேயன், வாலாஜா சாலையில் சாலை சீரமைப்பு பணிகள்  முடிந்து விட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுங்க சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கை விசாரித்து  முடிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மாத இறுதியில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.    

Related Stories: