×

வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை வேதாரண்யம் பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை

*நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வேதாரண்யம் :  வங்க்ககடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வேதாரண்யம் பகுதி பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலையால், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் தென்துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. புயல் தூர முன் அறிவிப்பை குறிக்கும் வகையில் நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லை தடை விதிக்கவில்லை.

 இதனால் வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க இன்று காலை சென்றனர். ஆனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மாணவன்மகாதேவி பகுதியை சேர்ந்த 500 பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்ைல. 2,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ேவதாரண்யம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று அதிகாலை அவசர அவசரமாக கரை திரும்பினர். கரைகளில் பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராமநாதபுரத்தில் மீன்பிடி அனுமதி சீட்டு வழக்கம் போல் வழங்கப்பட்டது. ஆனால் தென் துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை.  பாம்பன், மண்டபம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘டீசல் விலை உயர்வு, பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததது உள்ளிட்ட பிரச்னைகளால் மண்டபம் தென்கடல் விசைப்படகு மீனவர்கள் வாரம் மூன்று முறை மட்டும் தொழிலுக்கு சென்று வந்தனர். பலத்த காற்றால், தொழிலுக்கு செல்லாததால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.


Tags : Bank Sea , Vedaranyam, Fisherman, Fiber Boats, Storm cage boom
× RELATED இலங்கையால் கைது செய்யப்பட்ட...