×

கோபி அருகே அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா : 220 பேருக்கு பரிசோதனை

கோபி : கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளியில் 220 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.   தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்ததும், கடந்த 1ம் தேதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறப்பிற்கு முன் பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து, முழுமையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 இந்நிலையில், பல்வேறு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் வரும் போதே கிருமி நாசினி கொண்டு கையை சுத்தம் செய்தும், காய்ச்சல் உள்ளதா என்ற பரிசோதனைக்கு பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளி வகுப்பறையிலும் சமூக இடைவெளியுடனே மாணவ, மாணவிகள் அமர வைக்கப்படுகின்றனர். இந்நிலையில்  கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நான்கு மாணவர்களும் கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இந்நிலையில், பள்ளியில் உள்ள 220 மாணவர்கள், 37 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இன்று பள்ளியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக பள்ளி வளாகம், வகுப்பறைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Tags : Corona ,Kobe , Gobichettypalayam, Corona Virus, Governtment School
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...