டெல்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,399 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 17 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. மேலும் 30 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய்த் தொற்றால் ஒருவர் கூட கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழக்கவில்லை.

Related Stories:

>