தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்-அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

தென்காசி : கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் கோபாலசுந்தர்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்மநாதன் முன்னிலை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு முகாமை பார்வையிட்டு துவக்கி வைத்தார்.

 முகாமில் நலப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, நகராட்சி ஆணையாளர் பாரிஜான், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், ஆய்வாளர்கள் கைலாசம், சிவா, மாரிமுத்து, வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் செல்லத்துரை, நகர செயலாளர் சாதிர், முன்னாள் எம்எல்ஏக்கள் ரசாக், முத்துசெல்வி, மாநில மாணவரணி ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை,  அழகுசுந்தரம், கடற்கரை, கிறிஸ்டோபர், பேரூர் செயலாளர்கள் சுடலை, மந்திரம், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சேக்தாவூது, ஜெயக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வக்கீல் குமார்பாண்டியன், அணி அமைப்பாளர்கள் கோமதிநாயகம்,

குற்றாலம் குட்டி, டாக்டர் மாரிமுத்து, துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, ஜெயக்குமார், கண்ணன், சுரேஷ், செல்வம், நாகூர் மீரான், வீராணம் சேக் முகம்மது, செய்யது ஆபில், சண்முகநாதன், நகர நிர்வாகிகள் ஷேக்பரீத், பால்ராஜ், முருகன், அழகிரிசாமி, ஜமாலுதீன்பாபு,  மோகன்ராஜ், இசக்கிமுத்து, தங்கபாண்டியன், ராமராஜ், பரமசிவன், கமருதீன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், வீட்டுவசதி சங்க தலைவர் சுரேஷ், இசக்கி பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், காஜாமைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 47ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

செங்கோட்டை: செங்கோட்டை அருகேஉள்ள புதூர், புளியரை பகுதிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். புதூரில் கொரோனா காலத்தில் இறந்த 100க்கும் மேற்பட்டோரின் சடலங்களை தகனம் செய்த சிறகுகள் அமைப்பினர் மற்றும் கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளில் சிறப்பாக பணியாற்றிய புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி ஆகியோருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கினார்.  ஆய்வின் போது தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ், எஸ்பி கிருஷ்ணராஜ், டிஎஸ்பி மணிமாறன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் மரு. செல்வநாயகம், இணை இயக்குனர் (பொ)டாக்டர் கிருஷ்ணன்,

சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் செல்லத்துரை, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்மநாபன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகசாமி, துணை அமைப்பாளர் ஹக்கீம்,

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், சேக்தாவூது, பேபி ரஜப்பாத்திமா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி, செங்கோட்டை நகர துணை செயலாளர் பீர்முகம்மது, நகர விவசாய அணி அமைப்பாளர் தில்லை நடராஜன், பேச்சாளர் குற்றாலிங்கம், கடையநல்லூர் இஸ்மாயில், வார்டுசெயலாளர்கள் கோவிந்தராஜ், காந்தி பாபு, மாவட்ட பிரதிநிதி கல்யாணி, நகர இளைஞரணி மணிகண்டன் ,இசக்கி துரை ( எ ) ராஜா ,தொமுச மணி,குட்டி ராஜா, புதூர் பேரூர் செயலாளர் கோபால், இளைஞரணி சுப்புராஜ், கற்குடி சுரேஷ், பிட் வெல் மாரியப்பன், ஆசிரியர் ரவி, வக்கீல் மாரி குட்டி, சேக் அப்துல்லா, சன் ஷாகுல் ராவுத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

   ஆலங்குளம்: ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். முன்னதாக தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர். முகாமில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஞானதிரவியம் எம்பி, தாசில்தார் பரிமளா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அனிதா,

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், வட்டார மருத்துவ அலுவலர் குத்தாலராஜ், டாக்டர்கள் கீர்த்திகா, முகமது தாரிக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பன், சுகாதார ஆய்வாளர் கணேசன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம் அன்பழகன், நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் கணேஷ்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  புளியங்குடி: புளியங்குடி ஆர்.சி பள்ளியில் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமை சுகாதாரத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அவருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால  சுந்தர்ராஜ், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் செல்லதுரை,  வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், நகராட்சி மண்டல  இயக்குனர் விஜய லட்சுமி, பிற்பட்டோர் நல வாழ்வு துணை ஆட்சியர் குணசேகரன்,  கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 நிகழ்ச்சியில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன்,  புளியங்குடி நகர செயலாளர் ராஜ் காந்த். மாவட்ட சிறுபான்மை பிரிவு  அமைப்பாளர் பத்திரம் சாகுல்ஹமீது, சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக  விநாயகம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருணாசலம், பிச்சையா,  குகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செண்பக குற்றாலம், மாநில  பொதுகுழுஉறுப்பினர் வசந்தம் சுப்பையா, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்  ரமேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞரணி முத்துவேல், விக்ரம்  மணிகண்டன், முத்து செல்வம், சுரேஷ், நகர அவைத்தலைவர் இஸ்மாயில், துணை  செயலாளர் குருராஜ், நகர நிர்வாகிகள் கருப்பசாமி, சுதன் செல்வம்,  பேராசிரியர் நீலமேகம், குட்லக் நடராஜன், முத்துகுமார், குழந்தைராஜ்,

 சேதுராமன், ராஜவேல் பாண்டியன், செந்தூர் ஜெகநாதன், மாநில பேச்சாளர்கள்  சுப்பு, மீனாட்சி சுந்தரம், தொழில் அதிபர் பிவி பாலசுப்ரமணியன், நகர  காங்கிரஸ் கட்சி தலைவர் பால்ராஜ், முஸ்லிம் லீக் மணி சுடர் சாகுல் உட்பட  ஏராளமான நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர் முகாம்  ஏற்பாடுகளை புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் அறிவுறுத்தலின்  பேரில் சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்  ஈஸ்வரன் ,வெங்கட்ராமன் மற்றும் மேற்பாரவையாளர்கள் அண்ணாத்துரை,  திருமலைவேலு, விஜயராணி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் நகராட்சி  பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Related Stories:

More
>