×

“அரசுப் பணிகளில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயம்” - பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை: மகளிர் இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சட்டசபையில் இன்று பல்வேறு துறைகள் தொடர்பாக அறிவிப்பு மழை பொழிந்த வண்ணமுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யும் என்பதும் அப்படியான ஒரு அறிவிப்பாகும். தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மனித வள மேலாண்மை துறை 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

அதில்; அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் 30% இடஒதுக்கீட்டை 40%-ஆக உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும். அத்துடன் அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம். தமிழ்நாடு அரசின் போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும். கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ரூபாய் 15 இலட்சம் செலவில் மடிக்கணினிகள் மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் 535 அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.


Tags : Minister ,PDR ,Palanivel Thiagarajan , 'Tamil text paper is compulsory in all competitive examinations in government service' - Minister PDR Palanivel Thiagarajan's announcement in the assembly
× RELATED மன்னர்களைவிட மோசமான ஆட்சி நடந்து...