டி20 உலகக் கோப்பை எங்களுக்குதான்: வங்கதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் நம்பிக்கை.!

டி20 உலகக் கோப்பை தொடர், வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி முடிகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச அணியின் பெஸ்ட் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அளித்த பேட்டி:- டி20 உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்ள வங்கதேச அணி சிறந்த மனநிலையோடு இருக்கிறது.

அனைத்து வீரர்களும் தயாராக உள்ளனர். இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடர், டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக இருக்கும் என கருதுகிறேன். கடைசியாக விளையாடிய 3 டி20 தொடர்களிலும் வங்கேதச அணி அபார வெற்றிபெற்றது. இது, உலகக் கோப்பையில் பங்கேற்க மிகப்பெரிய தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. இதனால், நிச்சயம் டி20 உலகக் கோப்பையை நாங்கள் வெல்வோம். அதற்காக கடுமையாகப் போராட நாங்கள் தயார்’’ என கூறினார். வங்கதேச அணி கடைசியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களைக் கைப்பற்றி, சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>