போதையில் ராணுவ வாகனத்தை எட்டி உதைத்த மாடல் அழகி : மத்திய பிரதேச போலீசார் அதிர்ச்சி

குவாலியர்,:குவாலியரில் போதையில் ராணுவ வாகனத்தை சேதப்படுத்திய மாடல் அழகி மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் 22 வயதான இளம்பெண் ஒருவர் போதையில் நடந்து சென்றார். அவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனத்தின் ஹெட்லைட்டை திடீரென தனது காலால் உதைத்து உடைத்தார். வாகனத்தில் இருந்த ராணுவ அதிகாரி அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார். ஆனால், அந்த பெண் அவரை பின்னுக்குத் தள்ளினாள். அவ்வழியாக வந்தவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டினார். இந்த பெண்ணின் அடாவடி செயலால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்த பெண்ணை அந்த இடத்தில் இருந்து அழைத்து செல்ல போலீசாருக்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. தகவலறிந்த பதவ் போலீசார், பெண் போலீசாரின் உதவியுடன் அந்த ெபண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் குவாலியரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘டெல்லியை சேர்ந்த இந்த இளம்பெண் போதையில் இருந்தார். மாடல் அழகியாகவும் உள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குவாலியர் வந்ததாகவும், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலில் விருந்து சாப்பிட்டதாக கூறினார். அவரது நண்பர்களில் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், ஹோட்டலில் இருந்து வெளியே வந்ததாகவும், அவருக்கு ஏற்பட்ட கோபத்தால் ரகளையில் ஈடுபட்டதாக கூறினார். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அந்த ெபண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரின் நண்பர்களை வரவழைத்து, விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுவரை ராணுவ வீரர்களால் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை’ என்றனர்.

Related Stories:

>