×

கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுகிறார்?.. உலகக் கோப்பைக்குப்பின் ஒருநாள், டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா?

மும்பை: 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் முதலில் டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தோனி கேப்டன் பதவியைத் துறந்தபின், அனைத்து பிரிவுகளுக்கும் விராட் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.3 பிரிவுகளுக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டாலும் சிறிதுகூட தனது பேட்டிங்கில் தொய்வில்லாமல் பல நேரங்களில் அணிக்கு வெற்றி தேடித்தந்து, பொறுப்புள்ள கேப்டனாக இருந்து வருகிறார்.

கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை வகித்து அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு போட்டி டை ஆகவும், 2 ஆட்டங்கள் முடிவில்லாமலும் உள்ளது. 45 டி20 போட்டிகளுக்கு தலைமை ஏற்றுள்ள கோலி, அதில் 29 வெற்றிகளும், 19 தோல்விகளையும் கண்டுள்ளார். 2போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. 65 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்ற கோலி, அதில் 38 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிவரும் விராட் கோலி, தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பொறுப்பினைவிட்டு விலக உள்ளதாகவும், கேப்டன்சியைவிட்டு விலகும் தனது முடிவு குறித்து விராட் கோலி, ரோகித் ஷர்மாவிடமும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடமும் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அக்டோபரில் தொடங்கவிருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி தனது ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பதவியைவிட்டு விலகுவார் என்றும், இதுகுறித்த அறிவிப்பை விராட் கோலியே வரும் மாதங்களில் வெளியிடுவார் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


விராட் கோலியின் சாதனைகள்..!
* தலைநகர் டெல்லியில் 1988ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிறந்த விராட் கோலி, 3 வயதிலேயே கிரிக்கெட் மட்டையை தூக்கினார்.

* 15 வயதிற்கு உட்பட்டோருக்கான முதல் தர போட்டியில் டெல்லி அணி சார்பாக களம் கண்டார் கோலி.

* அதிரடி, ஆக்ரோஷம், நேர்த்தி என தனது பேட்டிங் திறமையை நாளுக்கு நாள் மேருகேற்றிக் கொண்டார் விராட். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் 2008ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தலைமையேற்று, சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.

* இளையோர் உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கோலி, இந்திய சீனியர் அணிக்காக 2008 ஆகஸ்ட்டில் இலங்கை உடனான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கினார்.

* அதன் பிறகு 2010ல் டி-20 போட்டியிலும், 2011ல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் களம் கண்டார் கோலி.
பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது சதங்களையும், சாதனைகளையும் அடுக்கினார் விராட்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 38 சதங்களை விளாசியவர், சர்வதேச கிரிக்கெட்டில் விரைவாக 18 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைகளை வசப்படுத்தினார்.

* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் , இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில், 6 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.

* ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் விராட் கோலி. அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சராசரியாக 49 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி.

* 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் குறைவான ஆட்டங்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையும் கோலியையே சாரும்.

* தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலி, 2017ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றுள்ளார்

* 2014ஆம் ஆண்டு இறுதியில் இந்திய டெஸ்ட் அணிக்காக கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகியபோது, அந்தப் பொறுப்பை கோலி ஏற்றார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தியது. இந்திய அணியை டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றினார்.


Tags : Virat Kohli ,Rohit Sharma ,T20I ,World Cup , Virat Kohli to step down as captain? Rohit Sharma to captain T20I team one day after World Cup?
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...