பெகாசஸ் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மறுப்பு

டெல்லி: பெகாசஸ் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்று ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து பதில் தேவையில்லை. பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எதையும் தெரிவிக்க முடியாது என்று அரசு கூறுவதை நம்ப முடியவில்லை.

Related Stories:

More
>