நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் ; கருப்பு பேட்ஜ் அணிந்தபடி அதிமுகவினர் வெளிநடப்பு

சென்னை : நீட் விலக்கு மசோதா தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதுமே நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராய அமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் வாக்குறுதியில் நீட் ரத்து செய்வோம் என்று அறிவித்து அதனை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதை குறிக்கும் வகையிலும் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர்.

மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஜெயலலிதா இருக்கும் போது கூட நீட்தேர்வு வரவில்லை. நீட் தேர்வு தொடர்பாக இன்று பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்; சட்டத்தை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும். நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அதிமுகவுக்கு இல்லை. ” என்று கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார், என குறிப்பிட்டார். இதையடுத்து அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories:

>