நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நீட் விலக்கு பெறுவது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் உயிரிழப்பதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி நீட் தேர்வை ரத்து செய்யாததால் மாணவர் தற்கொலை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. அனிதா தற்கொலை அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நடைபெற்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு வரவில்லை என முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அதிமுகவுக்கு இல்லை என முதல்வர் விமர்சித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

Related Stories:

>